Skip to main content

பாக்குமட்டை தட்டு தயாரித்தல்

பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் தொழில் எப்படி?
பாக்கு மட்டை தட்டு உற்பத்தி

யற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய திருப்பி இருக்கு. அதிலும் குறிப்பாக பாக்கு மட்டை தட்டுகளுக்கு கொஞ்சம் கூடுதலாவே வரவேற்பு இருக்கு.
ஏன்னா இதுல சூடான உணவுப்பொருட்களை வைப்பதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் தடிமமாவும் கனமாகவும் இருக்கு, அதுமட்டுமில்லாம இதோட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, மற்றும் சுகாதாரமான தயாரிப்பு முறை நம்ம ஊர்ல மட்டுமில்ல வெளிநாடுகளிலேயும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்லயும் விருப்பத்திற்குரியதா இருக்கு.
எல்லா தொழில்களைப் போல இல்லாம இந்த பாக்கு மட்டை தொழில்ல சவால்களும் நுணுக்கங்களும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. ஆனாலும் இதோட எதிர்கால வளர்ச்சி சிறப்பா இருகிறதுனாலயும் தட்டுகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரிச்சிகிட்டே போறதுனாலயும், machineries விக்கிறவங்க சொல்ற வாக்குறுதிய நம்பியும்  நிறைய பேரு இந்த தொழில நோக்கி வேகமா வந்து அப்புறம் தடுமாறுராங்க. அவங்களுக்கெல்லாம் வழிகாட்டுதல்தான் இந்தப் பதிவு.
இடவசதி:
இந்த பாக்கு மட்டை தொழிலுக்கான இட அமைப்பானது குறைந்தபட்சம் 500 சதுர அடிகளாவது சொந்தமாக இருக்க வேண்டும், அல்லது வாடகை மிக மிக குறைவாக இருந்தால் நலம். அதிக வாடகை உள்ள இடத்தில் நீங்கள் இந்த தொழிலை நடத்துவது அவ்வளவாக லாபகரமானதாக அமையாது. இவற்றில் மிசினுக்கு 100 சதுர அடிகள் சென்றாலும், 300 சதுர அடிகள் மட்டைகள் சேமித்து வைப்பதற்கும், 100 சதுர அடிகள் உற்பத்தி செய்த தட்டுகளை சேமித்து வைப்பதற்கும் தேவைப்படும். மட்டைகளை ஊற வைப்பதற்கு சுமார் 5x10 அடிகள் என்ற அளவில் தொட்டி ஒன்று தேவைப்படும் அது வெளியில் இருந்தால் நல்லது.
அடுத்தது,

மின் இணைப்பு:
மின் இணைப்பை பொறுத்தவரைக்கும் ஒருமுனை இணைப்பு (single phase connection) சிறந்தது. இதற்கு நீங்கள் single phase மோட்டர் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தை வாங்க வேண்டும்.
நீங்கள் SSI எனப்படும் small scall Industry certificate வாங்கிவிட்டால் ஒரு யூனிட்டுக்கு குறைவாக செலவாகும்.

மிஷின் :
பாக்கு மட்டை மிஷின்ல மூன்று முக்கிய பாகங்கள் இருக்கு முதலாவது ஃப்ரேம். பாக்கு மட்டை மிஷின பொறுத்த வரைக்கும் ஃப்ரேமோட தடிமன பொருத்து மிஷினோட விலை மாறுபடலாம். நீண்ட கால business ku ஃப்ரேமோட திக்னஸ் அதிகமா இருந்தா நல்லது ஏன்னா இது அதிர்வ கட்டுப்படுத்தி மிஷின  நீண்ட காலம் உழைக்க கூடியதா ஆக்குது.

இரண்டாவது டை இந்த டைய சுத்தி உள்ள பிளேடு மட்டைய வட்ட வடிவமாகவோ அல்லது வேறு வடிவமாகவோ கட் பண்ணி தட்டுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் கொடுக்குரதொட இல்லாம இந்த டைக்கு உள்ளே உள்ள காயில் மட்டைய சூடாக்கி அதுல உள்ள நீர் வற்றி அத ஒரு கடின தன்மையுள்ள தட்டா மாத்துது.

மூன்றாவது பெடல் இந்த பெடல் மோட்டர இயக்கி மேலும் கீழும் உள்ள டைய ஒன்றாக்கி அதற்கு இடையில் உள்ள தட்ட அழுத்தி பிடிக்க உதவுது.

மேலும் Thermostat எனும் கருவி டையில் உள்ள காயிலின் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

பாக்கு மட்டை பிளேட் மேக்கிங் மிஷின் ல 3 வகை இருக்கு.

1.   Manual – இதுல மோட்டார் எதுவும் பொருத்தப்பட்டிருக்காது மட்டைய டைல வச்சிட்டு கால்ல பெடல்ல press பண்ணி cut பண்ண வேண்டியிருக்கும்.இதுல கொஞ்சம் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கும்.
2.   இரண்டாவது Hydraulic Machine இது Motor மூலமாக இயங்கக் கூடியது. இந்த மிஷின பெடல் அல்லது ஸ்விட்ச் மூலமா ஈசியா இயக்கலாம்.
3.   மூன்றாவது ஆட்டோமேட்டிக் மிஷின் இதில் உள்ள டைமர் தட்டு ரெடி ஆனதும் தானாகவே டையை இயக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு டையும் தனித்தனி மோட்டர்ல இயங்கக்கூடியது, விலை அதிகமானது.

மூலப்பொருட்கள் :

இந்த பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியதும் ரொம்பவே சிக்கல் நிறைந்ததும் இதோட மூலப்பொருளான பாக்கு மட்டை கொள்முதல்தான்.
முதலாவது இது நம்ம தமிழ் நாட்டுல சேலம், போன்ற பகுதிகள்ல கிடைக்குது, ஆனா இதோட தேவைகள் அதிகரிச்சதுனால இப்ப ரொம்ப அரிதாகிட்டே வருது. அது மட்டுமில்லாம் இது season பயிர் அப்படின்ரதுனால வருடத்திற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு கிடைக்காமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் முன்கூட்டியே நீங்கள் சேமித்து வைக்க வேண்டுமானால் அதிக இடவசதியும் அதற்கென்று தனியாக முதலீடும் வேண்டும்.
நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிக அளவில் விளைச்சல் உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் தும்கூர் (Tumkur ) மற்றும் ஷிமோகா (Shimoga ) போன்ற நகரங்களில் மட்டையின் விளைச்சல் அதிகம் மற்றும் விலையும் குறைவாக உள்ளதால் அதிக அளவில் அங்கிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. 
கர்நாடகாவிற்கு ஒருமுறை நீங்களே நேரடியாக சென்று விசாரித்து வாங்குவது சிறந்தது. இவ்வாறு கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுமானால் ட்ரான்ஸ்போர்ட் செலவை சமாளிக்க லாரி, டாரஸ் போன்ற பெரிய வண்டிகளில் எடுத்து வர வேண்டும், அதை சேமித்து வைக்க நீர் புகா வண்ணம் முழுவதும் மூடப்பட்ட தனியாக இடவசதி வேண்டும். இந்த மட்டைகளின் மூலம் செய்யப்படும் தட்டுகள் அழகாகவும், கனமாகவும் ஏற்றுமதி தரத்தில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு இவ்வகை தட்டுக்களே அனுப்பப்படுகிறது.
அடுத்து கொண்டு வரப்பட்ட மட்டைகள் ஈரப்பதமான தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுவதால், மட்டைகள் உலர்வதற்கு ஏதுவாக அதனை உலர்ந்த காற்றோட்டமான இடத்தில் செங்குத்தான நிலையில் வைக்க வேண்டும். மேலும் ஈரப்பதத்தால் பூஞ்சைகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் முடிந்தவரை விரைவில் தட்டுகளாக்கி விட வேண்டும்.

செய்முறை:
இப்ப பாக்கு மட்டை தட்டு எப்படி தயாரிக்கிறாங்கன்னு பாக்கலாம்.
முதல்ல இந்த பாக்கு மட்டைகள எடுத்து சுத்தமான தண்ணீர் தொட்டியில போட்டு முப்பது நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை நன்றாக முழுவதும் மூழ்கி இருக்குமாறு ஊற வைக்க வேண்டும், அதிக நேரம் ஊற வைத்தால் அதில் உள்ள நீர் வற்ற காயில் அதிக மின்சாரத்தை வீணாக்கும். அதன் பின்பு அதில் உள்ள மண் மற்றும் வேறு ஏதேனும் அழுக்கு இருந்தால் ஒரு சாஃப்டான பிரஷ் கொண்டு ஒவ்வொரு மட்டையாக தேய்த்து கழுவி எடுத்து செங்குத்தான நிலையில் நீர் நன்றாக வடியும் வரை சுமார் முப்பது நிமிடங்கள் உலர வைக்க வேண்டும்.
பின்பு மட்டையின் வெளியிலுள்ள நீர் நன்றாக உலர்ந்த பின்பு, மிஷினை ஆன் செய்து, சுமார் பத்து நிமிடங்கள் டை நன்றாக சூடாகும் வரை காத்திருந்து, பின்பு மட்டையை அதோட சைஸ்க்கு ஏற்ற மாதிரி இரு டைக்கு இடையில் கொடுத்து, பெடலை உபயோகித்து மேலும் கீழும் உள்ள டையை ஒன்றாக சேர்த்து, அப்படியே மட்டையிலுள்ள நீர் வற்றும் வரை சூடு பண்ண வேண்டும், இதைப்போல அடுத்தடுத்த டையில் அதோட சைஸ்க்கு ஏத்த மாதிரி மட்டையை வைத்து விட்டால்  இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு பிறகு இப்பொழுது முதல் டையில் தட்டு ரெடி. இப்படியே தொடர்ந்தால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் சிறியதும் பெரியதுமாக 100 தட்டுக்களுக்கும் மேலாக ரெடி பண்ணலாம்.

தட்டுகள் செய்யும் போதே அதிலுள்ள ஈரம் முற்றிலுமாக போகும் வரை நல்லா ஹீட் பண்ணிட்டா தட்டுகள்ல பூஞ்சைகள் எனப்படும் Fungus ஃபார்ம் ஆகாமல், நிறைய நாள் ஸ்டாக் வச்சி யூஸ் பண்ண முடியும்.
இந்த தட்டோட அளவு டையோட சைஸ பொறுத்து 12”, 10”, 8”, 6” மற்றும் 4” அளவுகள்ள கிடைக்குது.
மட்டைகள் சிறியதும் பெரியதுமாக இருகிறதுனால வெவ்வேறு size உள்ள டைகள் உள்ள மிஷின் வாங்கினால்தான் அனைத்து மட்டைகளையும் உபயோகிக்க முடியும்.

மனிதவளம் (Manpower) :
இந்த தொழில பொறுத்த வரைக்கும் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.  
Marketing:
பாக்கு மட்டை தட்டுகள பொறுத்த வரைக்கும் Demand அதிகமாக இருகிறதுனால அது இருகிற இடத்துக்கே வந்து வாங்கிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க இருந்தாலும் நீங்க கேட்டரிங் பண்றவங்க , நாட்டு மருந்து கடைகள், பெரிய ஹோட்டல்கள் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியா சென்று சாம்பிள் கொடுத்து Canvas பண்ணீங்கன்னா ஆதாயம் அதிகமாக இருக்கும்.
பராமரிப்பு (Maintenance):
இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை டைக்கு உள்ளே உள்ள Heater காயில மாத்த வேண்டியிருக்கும், அதனால எல்லா டை சைஸ்லயும் ஒவ்வொரு காயில் ஸ்பேர் வச்சிக்கரது நல்லது.
ஈரம் அதிகமா உள்ள மட்டைய டைக்குள்ள வச்சிங்கன்னா  காயில அடிக்கடி மாத்த வேண்டியிருக்கும்.
தட்ட கட் பண்ற பிளேடு வருடதிற்கொரு முறை சாணை பிடிக்க வேண்டியிருக்கும், மட்டை சீசன் இல்லாத சமயங்களில் இத நீங்க பண்ணிக்கலாம்.

முடிவுரை (Conclusion ):
தற்போதைக்கு பாக்கு மட்டை தட்டு உற்பத்தி என்பது சந்தேகமே இல்லாம நல்ல லாபகரமான தொழில்தான், ஆனால் அதற்கான நல்ல இடவசதி ஏற்படுத்திரதுல தொடங்கி, சரியான இயந்திரத்த வாங்கி, மட்டைகள தட்டுப்பாடு இல்லாம இருப்பு வச்சி, தட்டுகள் தொடர்ந்து கிடைக்கும்படி செய்து, மற்றும் முறையாக சந்தைப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

Popular posts from this blog

உலர் பழங்கள் விற்பனையகம்

உலர்பழங்கள் விற்பனையகம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம், தகவல் தொழில்நுட்ப வேலையை (IT Company Job) விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம் அல்லது நல்ல எதிர்காலம் உள்ள தொழில் என்ன அப்படின்னு யோசிச்சிட்டு இருகீங்களா உங்களுக்கான சிறிய வழிகாட்டுதல்தான் தான் இந்த பதிவு. இந்தப்பதிவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான டிரண்டியான ஒரு பிசினஸ பத்தி பார்க்க போகிறோம். பெருகி வரும் நோய்களின் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துகிறாங்க. அதற்காக அவங்க உணவுபழக்கத்துல (diet) சத்துகள் அதிகம் நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர்பழங்கள்( Nuts & dryfruits) அதிகளவு சேத்துக்கிறாங்க, அதனால இதை விற்பனை செய்கிற கடைகளுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருக்கு. அந்த வகையில இன்றைக்கு நாம பாக்கப்போற தொழில் உலர்பழங்கள் விற்பனையகம் (Dryfruits Shop).   ஏற்கனவே நீங்க இந்த தொழில பண்ணிட்டு இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான நிறைய ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்களை (Tips & Tricks) இங்க சுருக்கமா கொடுத்திருக்கோம். இப்ப வாங்க பதிவுக்குள்ள போகலாம். இந்த வகை கடை...

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை    முகப்பு: குறைந்த செலவு, கட்டுமானத்திற்கு எளிதானது, மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் ஹாலோ பிளாக் கற்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதன் வகையில் இன்றைய பதிவு ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை. இறுதியில் இத்தொழிலுக்கான பிராஜக்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்ககோம் அதனால கடைசி வரை பாருங்க.   அறிமுகம்: கட்டுமான துறையின் அசுர வளர்ச்சி ஹாலோ பிளாக் கற்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய பதிவில் ஹாலோ பிளாக் கற்களின் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை விரிவாக காணலாம். கட்டமைப்பு வசதி: இத்தொழிலுக்கான இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும். திறந்தவெளியாக இருந்தால் பரவாயில்லை.  மிஷின் : ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று Concrete Mixer, மற்றொன்று hydraulic Pressing Machine.   இந்த Concrete Mixer கற்களுக்கு தேவையான சி...