உலர்பழங்கள் விற்பனையகம்.
புதிதாக என்ன தொழில் தொடங்கலாம், தகவல் தொழில்நுட்ப வேலையை (IT Company Job) விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம் அல்லது நல்ல எதிர்காலம் உள்ள தொழில் என்ன அப்படின்னு யோசிச்சிட்டு இருகீங்களா உங்களுக்கான சிறிய வழிகாட்டுதல்தான் தான் இந்த பதிவு.
இந்தப்பதிவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான டிரண்டியான ஒரு பிசினஸ பத்தி பார்க்க போகிறோம்.
பெருகி வரும் நோய்களின் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துகிறாங்க.
அதற்காக அவங்க உணவுபழக்கத்துல (diet) சத்துகள் அதிகம் நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர்பழங்கள்( Nuts & dryfruits) அதிகளவு சேத்துக்கிறாங்க, அதனால இதை விற்பனை செய்கிற கடைகளுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருக்கு.
அந்த வகையில இன்றைக்கு நாம பாக்கப்போற தொழில் உலர்பழங்கள் விற்பனையகம் (Dryfruits Shop).
ஏற்கனவே நீங்க இந்த தொழில பண்ணிட்டு இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான நிறைய ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்களை (Tips & Tricks) இங்க சுருக்கமா கொடுத்திருக்கோம்.
இப்ப வாங்க பதிவுக்குள்ள போகலாம்.
இந்த வகை கடைகளில் பொதுவா முந்திரி, பாதாம், பேரீத்தம்பழங்கள் (Dates), இறக்குமதி சாக்லேட்டுகள் (Imported Chocolates), பிஸ்கட்டுகள் போன்றவை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இயற்கை வேளாண்மையில் உருவாக்கப்பட்ட பொருட்களும், ஜூஸ் மற்றும் தேன் வகைகளும் விற்பனை செய்யலாம்.
இப்ப இந்த ஷாப்ல விற்பனை செய்யப்படுற அடிப்படைப் பொருட்கள் (Basic items) என்னன்னு பார்க்கலாம்.
முதலாவதா பாதாம்:
பாதாம்ல சின்னதும் பெரியதுமா நிறைய வகைகள் இருக்கு.
கூடவே வறுத்த (Roasted), பச்சை மிளகாய் (Green Chilli), சிவப்பு மிளகாய் (Red Chilli ), மிளகு (Pepper) போன்ற சுவைகளிலும் (Flavour) கடைகளில் வைத்து விற்கலாம்.
பாதாம்ல Branded Companies Packing நிறைய இருக்கு, நீங்களும் மொத்தமா வாங்கி லூஸ்ல Pack பண்ணி குடுக்கலாம்.
அடுத்ததா முந்திரி:
முந்திரில முழு முந்திரி, அரை முந்திரி, கால் முந்திரி, தூள் முந்திரினு பல வகை இருக்கு. அது மட்டுமில்லாம முந்திரில W240, W320, அப்படின்னு சைஸ் வாரியா பிரிசிருக்காங்க,
அப்பறம் Pista:
பிஸ்தா கொஞ்சம் காஸ்ட்லியா இருந்தாலும் நிறைய Sales aagum.
Wallnuts :
அடுத்ததா அதிகம் விரும்பப்படுற மற்றும் Health Benefits அதிகமா இருக்கிற வால்நட்ஸ், வால்நட்ஸ்-ல பொதுவா இரண்டு வகை உண்டு, ஒன்று மேல Polish பண்ணி Bright-ஆ வரும், மற்றொன்று Organic கருப்பா கொஞ்சம் கசப்பு சுவையொடு இருக்கும்.
பொதுவா நட்ஸோட Size கூட கூட விலையும் அதிகமாகும்.
இதுமட்டுமில்லாம இந்த மாதிரி கடைகள்ள அதிகமா விற்பனையாகிற பொருட்கள்னு பாத்திங்கன்னா Chocolates, அத்திப்பழம், உலர் திராட்சை, மற்றும் தேன் வகைகள்.
இது தவிர்த்து BlackCurrant, Craneberry, Blueberry, Strawberry, Redplum இவையெல்லாம் பெண்களால் அதிகம் விரும்பப்படுறதா இருக்கு.
மேலும் KIWI, Pinnapple, Mango, Papaya, Orange, Apricot போன்றவற்றின் உலர் பழங்களும், Flax Seed, துளசி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை, சூரியகாந்தி விதை, போன்ற விதைகளும், செர்ரி Hazlenut, Pine nut, குங்குமப்பூ உட்பட பல பொருட்களை விற்பனை செய்யலாம்.
செயற்கையான ஃப்ளேவர்கள் இல்லாத ரியல் ஜுஸ் எனப்படும் Whole Fruit பானங்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரைக்கும் நாம பார்த்தது அடிப்படை விற்பனை பொருட்கள்.
இனிமேல் வியாபாரத்தை பெருக்குவதற்கான யுக்திகளும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான நுணுக்கங்களையும் பார்க்கலாம்.
டிப்ஸ் அன் ட்ரிக்ஸ் :
பர்சேஸ் பண்ண வர கஸ்டமர்ஸ் நிறைய பேரு ஹெல்த் கான்சியஸா இருக்கிறதுனால நீங்க அது சம்பந்தமான பொருட்கள பார்வைக்கு வைத்தால் சேல்ஸ் அதிகமாகும். உதாரணத்துக்கு பாரம்பரிய சிறுதானிய வகைகளான குதிரைவாலி, சாமை, திணை, மூங்கில் அரிசி, போன்றவற்றை ஒரு ரேக்கில் வைக்கலாம்.
மேலும் ஆர்கானிக் எனப்படும் இயற்கை உரமிட்டு வளர்த்த பொருட்களையும் டிஸ்ப்பிளேக்கு வைக்கலாம்.
செக்கு எண்ணெய் இப்பொழுது பிரபலமாக இருப்பதால் நல்ல கடைகளில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை எண்ணெய்களையும் பார்வைப்படுத்தலாம்.
தேனை இயற்கை முறையில் அதனுடைய அடையுடன் விற்றால் வாடிகையாளர்களை ஈர்க்கலாம்.
நெல்லி, கொள்ளு, திரிபலா, கற்றாழை, வல்லாரை போன்ற அனைத்து வகை ஆர்கானிக் சாறு வகைகளும் மக்களால் விரும்பப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இலையிலான தட்டு போன்ற பொருட்களையும் விற்கலாம்.
அடுத்தது இப்பெல்லாம் சர்க்கரைய விரும்பாதவங்களுக்கு Sugarfree Products நிறைய வருது அத தனியா ஒரு Display-ல வச்சி அவர்களை கவரலாம்.
பண்டிகை காலங்கள் மட்டுமன்றி மற்ற நாட்களிலும் இப்பொழுது Gift Box எனப்படும் Mixed Fruits அடங்கிய டப்பாக்கள் பிரபலம் அதற்கென்று பிரத்யேக ராக்குகளில் விதவிதமாக பாக்ஸ்களை அடுக்கலாம்.
முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் கெமிக்கல்ஸ் கலக்கப்பட்ட பொருட்களை தவிர்த்தால் நிறைய பேரை ஈர்க்கலாம்.
வெளிநாட்டு Perfumes, Imported Nutrition Food மற்றும் Non-Alcoholic Malt Beverages கூட விற்பனை செய்யலாம்.
கொள்முதல்:
Nuts & Dryfruits – ல பெரும்பாலும் ஈரான், ஆஃப்கானிஸ்தான், US போன்ற நாடுகளிலிருந்து அதிகமா வருது.
குறிப்பா irannian Organic Badam - Mamra is ரொம்ப Popular and US-ஓட Calfornian Jumbo Badam இதோட சுவைக்காக fast moving-ஆ இருக்கு.
Dates-ல ஈரான்ல இருந்து வரும் KIMIA Black Dates soft-ஆ இருக்கும், அதிகமா Move ஆகும், , இதுல நிறைய போலிகள் வருது, அப்பறம் Middle East la இருந்து நிறைய வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
அத்திபழத்துல ஆஃப்கானிஸ்தான்ல இருந்து வர காபுல் அஞ்சீர் ரொம்ப பாப்புலர்.
உலர் திராட்சைல வெள்ளைய விட கருப்பு திராட்சை அதிகமா Move ஆகும்.
Chocolates-ல Poppular-ஆன எல்லாமே பெரும்பாலும் SWISS Made தான், இதுல நிறைய Move ஆகுற Chocolates Ferrero-Rocher, Toblerone, Mars, Bounty, Jewels, M&M, Galaxy இப்படி நிறைய இன்னும் வெரைட்டீஸ் இருக்கு. மேலும் Dark Chocolates Heart-க்கு நல்லதுன்னு சொல்லிட்டு அதையும் நிறைய பேரு தேடி வராங்க.
குழந்தைக்களுக்காக Nutella chocolate Spread நிறைய போகுது.
தேன்ல நிறைய varieties இருந்தாலும் Organic தேன் வகைகளை மக்கள் அதிகமா விரும்புறாங்க.
இதுல சில பொருட்கள் நம்ம நாட்டுல காஷ்மீர் போன்ற மாநிலங்களிலிருந்து கூட கிடைக்குது, தமிழ்நாட்டுல பொதுவா முந்திரி, பண்ருட்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிருந்து கிடைக்குது.
இந்த பொருட்கள் எல்லாம் இங்க இருக்கிற Wholesale வியாபாரிகள் மொத்தமா வாங்கி விக்கிறாங்க, அவங்ககிட்ட இருந்து நம்ம Purchase பண்ணிக்கலாம். குறிப்பா சென்னைல பாரிஸ்ஸ சுற்றியுள்ள கொத்தவால்சாவடி Govindappa Naicken Street, Anna Pillai Street இந்த இடங்கள்ல உள்ள Wholesale கடைகள்ல இந்தியா உட்பட உலகில் உள்ள எல்லா வகையான Nuts, Dryfruits, Dates, Chocolates மற்றும் அனைத்து வகை Imported பொருட்களும் மொத்த மற்றும் சில்லரை விலைக்கு கிடைக்கும், நீங்க வெளியூர்ல இருந்து வாங்கினாலும் Cargo Service வசதியும் பக்கத்திலேயே இருக்கு.
மார்கெட்டிங்:
நிறைய பேக்கரீஸ நீங்க டார்கட் பண்ணலாம், அங்க தூள்
முந்திரி, பாதாம், செர்ரீஸ் போன்ற பொருட்கள் அதிக அளவு போகும்.
Birthday day, Wedding Day-ல Nuts அடங்கிய Gift Box குடுக்கிறது இப்ப Fashion ஆயிட்டு வருது.
இப்பொழுதெல்லாம் ஃபெஸ்டிவல் சீசன்ல IT Companies கூட தங்களோட Staff-ங்களுக்கு Gift Hampera இதத்தான் தராங்க. So அவங்கள Target பண்ணீங்கன்னா Sales increase ஆகும்.
மற்ற கடைகளை விட நீங்க எப்படி Different-ஆ இருக்கீங்க என்பதைப் பொறுத்து கஸ்டமர் வரத்து அதிகமாகும். இது எல்லா Business-க்கும் பொருந்தும்.
Sales Pick-up ஆகறதுக்கு Regular Customer புதுசா என்ன கேக்குறாங்க என்பதை அறிந்து வாங்கி விற்கலாம் மற்றும் புது Customers-ஐ ஈர்ப்பதற்கான வழிகளை ஆராயலாம்.
Business ஓரளவு நல்லா Pick-up ஆன பிறகு, FoodSafety ‘FSSAI‘ Registration பண்ணி நீங்களே உங்க Own Brandla Pack பண்ணி மற்ற கடைகளுக்கும் Supply பண்ணலாம்.
விளம்பரம்:
இந்த மாதிரி கடையை பொறுத்த வரைக்கும் ஆன்லைன் பிரசன்ஸ் ரொம்ப முக்கியம்.
ஏதாவது ஒரு வெப்சைட்டில் உங்களுடைய கடையின் சிறப்பென்ன
என்பதை குறிப்பிட்டு விளம்பரம் செய்யலாம்.
அருகில் உள்ள வீடுகளில் Discount மற்றும் Offer-கள் அடங்கிய Flyers குடுக்கலாம்.
சவால்கள் :
சவால்கள்னு பாத்திங்கன்னா Shop-ஓட Location-அ பொறுத்து கொஞ்சம் slow-va பிக்கப் இருக்கும், Starting-ல அடிப்படை பொருட்களை வைத்து Sales பிக்கப் ஆக ஆக one-by-one-ஆ பொருட்களை பார்வைப்படுத்துங்கள்,
Choclates எல்லாம் ஒரு குறிப்பிட்ட Tempraturela எப்பொழுதும் Maintain பண்ணனும் இல்லனா அதோட Shape மாறுவதற்கும், எக்ஸ்பயரி ஆவதற்கும் வாய்ப்பு உண்டு.
நட்ஸ் அன் டேட்ஸ் ல வண்டுகள் தொல்லை கொஞ்சம் இருக்கும், இந்த மாதிரி பொருட்களில் வழக்கமா வரும், முடிந்தவரை ஸ்டாக்க ஃபரஸ்ஸா மெயின்டைன் பண்ணீங்கண்ணா வண்டுகளை தவிர்க்கலாம்,
அடுத்தது பேக்கிங் பொருட்களோட எக்ஸ்பயரி முடியிரதுக்கு மூன்று அல்லது இரண்டு மாதத்திற்கு முன்பே தனியாக வெளியே எடுத்து அல்லது கேஷ் கவுண்டரில் வைத்து ‘ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்’ கொடுத்து காலி பண்ணலாம்.
இடவசதி:
இந்த Business-க்கு எந்த Shop-ஆ இருந்தாலும் பரவாயில்லை, மக்கள் அதிகம் வந்து செல்கிற இடமாக பார்கிங் வசதியொடு இருந்தால் நலம். கடையின் முன்புறம் மக்களை கவரும் விதமாக பொருட்களை அடுக்க வேண்டும். ஒரே வகை பொருட்கள் தனி ரேக்குகளில் இருக்குமாறு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு Chocolate items எடுத்துட்டீங்கன்னா அனைத்து வகை Chocolate-களும் ஒரே இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும்.
இந்த வகை கடை நடத்துவதற்கு Advance தவிர்த்து சுமார் 7,00,000 – 12,00,000 வரை ஆகும், இவற்றில் Display Rack-களுக்கான செலவு 3,00,000 – 5,00,000 மற்றும் விற்பனை பொருட்களுக்கான முதலீடு 400000 – 700000 வரை அடக்கம்.
ஒரு நாளைக்கு 10,000 – 15,000 வரைக்கும் Sales target Achieve பண்ணா Monthly லாபம் 10 to 12% Range-ல குறைந்தபட்சம் 30,000 லிருந்து அதிகபட்சம் 54000 வரை Net Profit கிடைக்கும். அதிக முதலீடு அதிக லாபம்.
Conclusion :
தற்போது நிறைய போட்டி இல்லாத, அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழில் எதுவென்று பார்த்தால் Nuts & Dryfruits Shop-னு சொல்லலாம்.
இந்த Nuts&Dryfruits Shop ஒரு புதுமையான, நவீன காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஒரு decent-ஆன Business, இதில் விற்கப்படுகிற பொருட்களின் தரம் மற்றும் தன்மைகளை அறிய சொந்த அனுபவம் கொஞ்சம் முக்கியம், அதனால் Starting-ல ஒரு சிறிய முதலீட்டில் Start பண்ணி , படிப்படியா Develop பண்ணீங்கன்னா, வளர்ச்சி சீராக இருக்கும்,
உங்களுடைய வெற்றிக்கு எங்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம். நன்றி.
பிடிச்சா ‘Like’
நண்பர்களுக்கு ‘Share’
இந்தப்பதிவை வீடியோ வடிவில் காண கீழே அழுத்தவும்,