Skip to main content

உயர்தர சோப்புத்தூள் செய்முறை

உயர்தர சோப்புத்தூள் செய்முறை :





இன்றைக்கு நமது வலைப்பதிவில் பார்க்கப் போற பதிவு ‘உயர்தர சோப்புத்தூள் செய்முறை’.


நிறைய சோப்புத்தூள் ஃபார்முலாக்களில் சிறந்ததா உள்ள, பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, 100 சதவீதம் செயல் திறனுள்ள ஃபார்முலாதான் இந்த சோப்புத்தூள் செய்முறை.

இதற்குத் தேவையான மூலப்பொருட்கள் :


G-Salt அல்லது Glauber’s Salt – 1 Kg

Washing Soda அல்லது Sodium Carbonate – 3 Kg

Baking Soda அல்லது Sodium Bi Carbonate – 2 Kg

TSP அல்லது TriSodium Phosphate – ½ Kg

Free Flow Salt – 2½Kg
Tinopal – 100gm
Acid Slurry or LABSA – 1Kg
Colour Granules – 100gm
Scent or Perfume – 25ml

இதர பொருட்கள் Plastic Bucket, நீளமான குச்சி, சல்லடை, எடை மிஷின் திக் பாலித்தீன் கவர், Sealing Machine, கையுறை (Gloves), மற்றும் Face Mask

செய்முறை :
முதல்ல நல்ல அகலமான பிளாஸ்டிக் பக்கெட் எடுத்து அதில் இந்த G-Salt 1 கிலோ போடுங்க. Salt கட்டிகட்டியா இருந்ததுன்னா முன்னாடியே பாக்கெட்டோட சுத்தியல் வச்சி நல்லா தூளாக்கிட்டு பக்கெட்ல போட்டீங்கண்ணா எளிதாக இருக்கும்.

இந்த G-Salt ஒரு ‘Filler’- ஆ செயல்படுது. அதாவது சோப்புத்தூள்ல எல்லா பொருட்களும் சமமாக பிரிந்து இருக்குமாறு உதவுகிறது.
அடுத்ததா 3 கிலோ Washing Soda இது தண்ணீரை மென்மையாக மாற்றுகிறது.

அப்பறம் Baking Soda – 2Kg இது அழுக்கு மற்றும் துர்நாற்றத்தை  நீக்க உதவுகிறது.

இதெல்லாம் போட்டுட்டு முடிந்தவரை நன்றாக கலக்கி விட்டுக்கொள்ளுங்கள்.

அடுத்ததா TSP எனப்படும் Trisodium Phosphate – 500gm சேத்துக்கங்க, இது எண்ணெய் பிசுக்கு மற்றும் Grease கறைகளை நீக்க பயன்படுகிறது.
பிறகு Free Flow Salt – 2½Kg சேர்த்து நன்றாக கலக்கி விடுங்க. இந்த Free Flow Salt ஒரு எடை கூட்டும் பொருளாக., சோப்புத்தூளை கட்டிப்படாமல் பாதுகாக்கிறது.

இப்ப இந்தக் கலவையை கட்டி இல்லாதவாறு சுமார் பத்து நிமிடங்கள் நன்றாக கலக்க வேண்டும்.

அடுத்ததா Tinopal – 100gm இது துணிகள் மஞ்சளாகாமல் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.

இதெல்லாம் போட்டுட்டு நல்லா கலந்துக்கங்க.

இப்ப நாம Acid Slurry கலக்கப்போறோம் அதுக்கு முன்னாடி நீங்க Gloves மற்றும் Face Mask போட்டுக்க வேண்டியது அவசியம், ஏன்னா Acid Slurry கலக்கும்போது ஒரு விதமான நெடி வரும், உங்களுக்கு சுவாச பிரச்சினை இருந்துன்னா அது உங்கள பாதிக்கும், அதனால கை, முகம் மறைத்து குழந்தைகள் யாரும் அருகே வராதவாறு காற்றோட்டமான இடத்தில் வைத்து கலக்கவும், இது தற்காலிகமா ஆஸ்துமாவைக் கூட உண்டு பண்ணலாம்.

Acid slurry-ஐ மெதுவாக சிறிது சிறிதாக மேலிருந்து ஊற்றிக்கொண்டே கலக்கவும். இந்த Acid Slurry-ஆனது சோப்புத்தூளின் நுரை வளத்திற்காக உதவுகிறது.

இப்பொழுது கலவையானது மெதுவாக பொங்கி வரும், சிறிது நேரத்திற்கு பிறகு கலவையானது சமநிலையை அடையும், இதற்கு ஆங்கிலத்தில் Acid-Base Titration என்று பெயர், அதாவது Acid-ம் Salt-ம் கலந்து ஒரு Nuetral form-க்கு வரும், இதற்க்குப் பிறகு அந்த ஆசிட்டலோ சால்ட்டாலோ எந்த தீங்கும் வராது.

நீங்க இந்த சோப்புத்தூள நிறைய அளவுகளில் Mix பண்றதுக்கு இந்த மாதிரி Ribbon Blender Machine உபயோகமா இருக்கும்.

வெவ்வேறு கொள்ளளவுள்ள மிஷின்கள் மார்கெட்ல கிடைக்குது.
அடுத்ததா any Water-Based Perfume – 25ml add பண்ணிக்குங்க, அத்தர் அப்படீன்னூ கேட்டீங்கன்னா கிடைக்கும்.

அப்பறம் Colour Granules ஒரு 100gm, உங்களுக்கு பிடித்தமான எந்த colour-ஆ இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் என்ன Perfume சேர்க்கிரீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி Colour Granules add பண்ணீங்கண்ணா உங்க Product-அ identify பண்றதுக்கு ஈஸியா இருக்கும்.

நீங்க எவ்வளவுக்கெவ்வளவு நல்லா Mix பண்றீங்களோ சோப்புத்தூளோட தரம் நல்லா இருக்கும், தண்ணீர்ல எளிதா கரையும்.
கடைசியா நீங்க இது மாதிரி சோப்புத்தூள நல்லா சல்லடையில சலித்து எடுத்திட்டீங்கன்னா இன்னும் கூட தரமாக இருக்கும். கட்டிகள் வந்தால் நன்றாக நசுக்கி விட்டு திரும்ப சலிக்கவும்.

Starting-ல உங்க Company name போட்டு Sticker Label-ல Colour Xerox Print எடுத்து பாலித்தீன் கவர்ல ஒட்டி sales பண்ணலாம்.

இந்த மூலப்பொருட்களுக்கான செலவு சற்றேறக்குறைய 600 ரூபாய் ஆகும். மேற்குறிப்பிட்ட அளவுகளில் சுமார் 10 கிலோ சோப்புத்தூள் கிடைக்கும். இதன்மூலம் ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் பாலித்தீன் கவர் இதர சேர்த்து சுமார் 65 ரூபாய் அடக்க விலையாகும். 

இந்த சோப்புத்தூள் Surf Excel, Ariel Matic Topload தரத்திற்கு நிகராக அல்லது அதற்கு கூடுதலாகவே இருக்கும், Ariel Matic Topload Washing Powder இப்பொழுது கிலோ சுமார் 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால் நாம் 100லிருந்து – 130 ரூபாய் வரை கூட விற்பனை செய்யலாம்.

அதிக அளவுகளில் மூலப்பொருட்கள் வாங்கப்படும்பொழுது ஒரு கிலோவிற்கு 55 ரூபாய் வரை கூட அடக்க விலையாகும்.
கிலோவாக வாங்க தயங்கும் வாடிக்கையாளர்களுக்கு 100gm Sample Pocket மாதிரி போட்டு வைத்துகொண்டு Canvas பண்ணலாம்.
இன்னும் நிறைய RIN, Tide போன்ற தரத்தினாலான சோப்புத்தூள் செய்து அனைத்து வகை வாடிக்கையாளர்களையும் கவரலாம், இவ்வாறான தொடர் ஐடியாக்களுக்கு இணைந்திருங்கள்.

உங்கள் வெற்றிக்கு மற்றும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

நல்லதையே சிந்திப்போம்! நல்லதையே செய்வோம்!! நன்றி!!!

இந்தப் பதிவை வீடியோ வடிவில் காண கீழே அழுத்தவும்.


Popular posts from this blog

உலர் பழங்கள் விற்பனையகம்

உலர்பழங்கள் விற்பனையகம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம், தகவல் தொழில்நுட்ப வேலையை (IT Company Job) விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம் அல்லது நல்ல எதிர்காலம் உள்ள தொழில் என்ன அப்படின்னு யோசிச்சிட்டு இருகீங்களா உங்களுக்கான சிறிய வழிகாட்டுதல்தான் தான் இந்த பதிவு. இந்தப்பதிவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான டிரண்டியான ஒரு பிசினஸ பத்தி பார்க்க போகிறோம். பெருகி வரும் நோய்களின் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துகிறாங்க. அதற்காக அவங்க உணவுபழக்கத்துல (diet) சத்துகள் அதிகம் நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர்பழங்கள்( Nuts & dryfruits) அதிகளவு சேத்துக்கிறாங்க, அதனால இதை விற்பனை செய்கிற கடைகளுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருக்கு. அந்த வகையில இன்றைக்கு நாம பாக்கப்போற தொழில் உலர்பழங்கள் விற்பனையகம் (Dryfruits Shop).   ஏற்கனவே நீங்க இந்த தொழில பண்ணிட்டு இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான நிறைய ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்களை (Tips & Tricks) இங்க சுருக்கமா கொடுத்திருக்கோம். இப்ப வாங்க பதிவுக்குள்ள போகலாம். இந்த வகை கடை...

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை    முகப்பு: குறைந்த செலவு, கட்டுமானத்திற்கு எளிதானது, மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் ஹாலோ பிளாக் கற்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதன் வகையில் இன்றைய பதிவு ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை. இறுதியில் இத்தொழிலுக்கான பிராஜக்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்ககோம் அதனால கடைசி வரை பாருங்க.   அறிமுகம்: கட்டுமான துறையின் அசுர வளர்ச்சி ஹாலோ பிளாக் கற்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய பதிவில் ஹாலோ பிளாக் கற்களின் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை விரிவாக காணலாம். கட்டமைப்பு வசதி: இத்தொழிலுக்கான இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும். திறந்தவெளியாக இருந்தால் பரவாயில்லை.  மிஷின் : ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று Concrete Mixer, மற்றொன்று hydraulic Pressing Machine.   இந்த Concrete Mixer கற்களுக்கு தேவையான சி...

பாக்குமட்டை தட்டு தயாரித்தல்

பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் தொழில் எப்படி? பாக்கு மட்டை தட்டு உற்பத்தி இ யற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய திருப்பி இருக்கு. அதிலும் குறிப்பாக பாக்கு மட்டை தட்டுகளுக்கு கொஞ்சம் கூடுதலாவே வரவேற்பு இருக்கு. ஏன்னா இதுல சூடான உணவுப்பொருட்களை வைப்பதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் தடிமமாவும் கனமாகவும் இருக்கு, அதுமட்டுமில்லாம இதோட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, மற்றும் சுகாதாரமான தயாரிப்பு முறை நம்ம ஊர்ல மட்டுமில்ல வெளிநாடுகளிலேயும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்லயும் விருப்பத்திற்குரியதா இருக்கு. எல்லா தொழில்களைப் போல இல்லாம இந்த பாக்கு மட்டை தொழில்ல சவால்களும் நுணுக்கங்களும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. ஆனாலும் இதோட எதிர்கால வளர்ச்சி சிறப்பா இருகிறதுனாலயும் தட்டுகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரிச்ச...