ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை
முகப்பு:
குறைந்த செலவு,
கட்டுமானத்திற்கு எளிதானது, மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை
முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் ஹாலோ பிளாக் கற்களுக்கான கிராக்கி
அதிகரித்துள்ளது. அதன் வகையில் இன்றைய பதிவு ஹாலோ
பிளாக் கற்கள் உற்பத்தி முறை. இறுதியில் இத்தொழிலுக்கான பிராஜக்ட் ரிப்போர்ட்
கொடுத்திருக்ககோம் அதனால கடைசி வரை பாருங்க.
அறிமுகம்:
கட்டுமான துறையின்
அசுர வளர்ச்சி ஹாலோ பிளாக் கற்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய பதிவில்
ஹாலோ பிளாக் கற்களின் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை
விரிவாக காணலாம்.
கட்டமைப்பு வசதி:
இத்தொழிலுக்கான
இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும்.
திறந்தவெளியாக இருந்தால் பரவாயில்லை.
மிஷின் :
ஹாலோ பிளாக் கற்கள்
உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று Concrete Mixer, மற்றொன்று hydraulic
Pressing Machine.
இந்த Concrete
Mixer கற்களுக்கு தேவையான சிமென்ட் கலவையை கொடுக்கும், இந்த Hydraulic Pressing Machine
அந்த கலவையை அச்சில் வார்த்தெடுத்து கற்களாக உருவாக்கும். இதன் விலை அறுபதாயிரத்திலிருந்து.
(60000).
இந்த
Hydraulic Pressing Machine-ல் இரண்டு வகை உண்டு.
ஒன்று
1.
Stationary
Type Block Making Machine நிலையாக ஒரே இடத்தில் இயங்கக்கூடியது.
மற்றொன்று,
2.
Egg-Laying
Type Block Making Machine நகரக்கூடியது.
ஹாலோ பிளாக் கற்கள்
உற்பத்தியில் இந்த Egg-Laying Type Machine பரவலாக ஈடுபடுத்தப்படுகிறது.
மூலப்பொருட்கள்
:
இப்பொழுது இதற்கான
மூலப்பொருட்களை பற்றி காணலாம்.
ஜல்லி
(கால் இஞ்ச் அளவுள்ளது),
கிரஷர்
மண்(பவுடர் போல் இல்லாமல்,
குருணை போல் இருக்க வேண்டும்.)
சிமென்ட்
(ஓபிசி ரகம்). இதை பயன்படுத்தினால்
உற்பத்தி செய்த 4 மணி நேரத்தில்
காய்ந்து விடும்.
தயாரிப்பு முறை
:
மிக்ஸர் மிஷினை
இயக்கி அதில் சிமென்ட் 1 பங்கு
ஜல்லி 2 பங்கு, கிரஷர்
மண் 2 பங்கு என்ற விகிதத்தில் கொட்ட வேண்டும்.
பின்பு ஒரு வாளி தண்ணீரை அதில் ஊற்ற
வேண்டும், அதே விகிதத்தில் மீண்டும் மூன்று நான்கு முறை இவ்வாறு வரிசையாக கொட்ட வேண்டும்.
பின்பு கலவையை
வெளியே எடுத்து அது காய்வதற்கு முன் உடனடியாக Hydraulic Pressing Machine-ல் கொடுத்து,
Press-ஐ உபயோகித்து நன்றாக பலமுறை அழுத்தி, பின்பு விடுவித்தால் கற்கள் ரெடி. இதே மிஷினில்
மேலுள்ள அச்சை மாற்றுவதன் மூலம், சாலிட் பிளாக் கற்களையும் உருவாக்கலாம், இவை ஹாலோ
பிளாக் கற்கள் போலல்லாமல் நடுவே துவாரமின்றி வெளி வரும், உறுதியான கட்டிடங்களுக்கு
இவ்வகை கற்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.
இவ்வகை மிஷின்களில்
4 இன்ச், 6 இன்ச் மற்றும் 8 இன்ச் அளவுள்ள கற்கள் உற்பத்தியாகிறது.
வெளிவரும் கற்கள்
சுமார் மூன்று மணி நேரத்திற்குள் காய்ந்து விடும், இருப்பினும் 24 மணி நேரத்திற்கு
அதே இடத்தில் காய வைத்து, பின்பு வேறு இடம் மாற்றி, ஒரு வாரத்திற்கு தினமும் மூன்று
வேளை சூரியன் உதிப்பதற்கு முன்பு, உச்சி வெயிலுக்கு முன்பு மற்றும் சூரியன் மறைவிற்கு
பின்பு முழுமையாக நனையுமாறு தண்ணீர் விட்டு வர வேண்டும். பின்பு மறுபடியும் ஒரு மூன்று
நாட்களுக்கு காய வைத்தால் கற்கள் விறபனைக்கு ரெடி.
இவ்வாறு சரியான
முறையில் பதப்படுத்தினால கற்கள் சிறந்த தரத்தில் கிடைக்கும்.
manpower :
இரண்டு பேர் கலவையை
தயார் செய்வதற்கும், இரண்டு பேர் Hydraulic Machine-க்கும் மொத்தம் ஒரு ஷிஃப்டிற்கு
4 ஆட்கள் வீதம், இரண்டு ஷிஃப்டிற்கு 8 ஆட்கள் தேவைப்படும்.
வருவாய்:
சிமெண்ட், ஜல்லி
விலையேற்றத்திற்கு ஏற்ப கற்களை கூடுதல் விலைக்கு விற்கலாம், இட வாடகை, ஆட்கள் கூலி,
மின்சார கட்டணம் உட்பட ஒரு கல்லுக்கான உற்பத்தி செலவிற்கு மேல் 20% லாபம் வைத்து விற்றால்,
மாதம் நாற்பதாயிரத்திற்கும் (40,000) மேலாக லாபம் ஈட்டலாம்.
இந்தத் தொழிலுக்கான
இடம் அட்வான்ஸ், மிஷினுக்கான செலவு, இதர செலவுகள் மற்றும் செயல்பாட்டு முதலீடு
(working Capital) அனைத்தும் சேர்த்து சுமார் 8 லட்சம் வரை ஆகும்.
திட்ட அறிக்கை (Project
Report):
முதலீடு :
12
சென்ட் இடம் (அட்வான்ஸ் ரூ. 1 லட்சம்),
போர்வெல்
தண்ணீர் வசதி (ரூ.1 லட்சம்),
மிக்ஸர்
மெஷின் (ரூ.60 ஆயிரம்),
ஹைட்ராலிக்
பிரசிங் மெஷின்(ரூ.1.50 லட்சம்),
டிராலி
2, பிளாஸ்டிக் ஷீட் (ரூ.20 ஆயிரம்),
4,
6, 8 இஞ்ச் ஹாலோபிளாக் + சாலிட் பிளாக் அச்சுகள் – 1,20,000
செயல்பாட்டு
முதலீடு ( Working Capital ) – 2.5 லட்சம்
மொத்த
முதலீட்டு செலவு ரூ.8.0 லட்சம்.
வருவாய்:
இட
வாடகை ரூ.8000 - 10ஆயிரம்,
சிறு
தொழில் சான்றிதழ் மின் கட்டணம் மாதத்திற்கு ரூ.500 (மாறுதலுக்குட்பட்டது).
4 ஊழியர் (ஒரு ஷிஃப்ட்)
கூலி ரூ.40 ஆயிரம், மாதம் 20 ஆயிரம் கற்கள் உற்பத்தி
4
இஞ்ச் 10 ஆயிரம், 6 இஞ்ச், 5 ஆயிரம், 8 இஞ்ச் கற்கள்) 5 ஆயிரம் எண்ணிக்கை
சாலிட்பிளாக்
கற்கள் தயாரிக்க கூடுதலாக கல் ஒன்றுக்கு ரூ.5 வரை செலவாகும்.
4”
(13 கிலோ) ரூ.20க்கும், 6”(19 கிலோ) ரூ.25, 8“ கல் (25 கிலோ) ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
(இன்றைய சந்தை நிலவரம் மாறுபடலாம்)
இதன் மூலம் வருவாய் ரூ.4.3 லட்சம். லாபம் ரூ.39 ஆயிரம். சிமென்ட்,
ஜல்லி, கிரஷர் மண் விலை ஏற்றத்துக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். சிமென்ட் காலி
சாக்குகள் மூலம் வருவாய் தலா ரூ.2 வீதம் 325க்கு ரூ.650. மாதம் சராசரியாக ரூ.40 ஆயிரம்
லாபம் கிடைக்கும்.