நவீன யுகத்திற்கு ஏற்ற ஐந்து அதிக லாபம் தரும் தொழில்கள் ஆலோசனை மையம் (Consultancy) : இந்த கன்சல்டன்சி தொழில் அதிகமா பிரபலமா இருக்கிறதுக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கன்னா, இதுக்கு முதலீடு அவ்வளவா தேவைபடாததுதான். ஜஸ்ட் சின்னதா ஒரு இடம், டேபிள், சேர் அப்பறம் கொஞ்சம் பேச்சுத்திறமை இருந்தா போதும். இதுல நீங்க எதப்பத்தி வேணாலும் ஆலோசனை வழங்கலாம், உதாரணத்திற்கு ஜாப் கன்சல்டன்டா நீங்க CV எப்படி ரெடி பண்றது, இன்டர்வியூல எப்படி நல்லா பண்றது போன்ற ஆலோசனைகளை வழங்கலாம். பிசினஸ் கன்சல்டன்டா ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான முதல் எவ்வளவு தேவைப்படும், இயந்திரங்களை எங்கிருந்து வாங்கலாம் போன்ற தகவல்களை தரலாம், இன்னும் திருமண தகவல், கட்டுமானம் போன்ற கன்சல்டன்டாகவும் செயல்படலாம். உடற்பயிற்சி கூடம் (Fitness Studio / Gym): இந்த காலகட்டத்துல உடற்பயிற்சி கூடத்திற்கு இருக்கிற வரவேற்பை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆண், பெண் இருபாலருமே வந்து செல்கிற உடற்பயிற்சி கூடங்கள் பெருகிட்டே வருது, உங்களுக்கு தேவையானது ஒரு சிறந்த ஜிம் பயிற்சியாளர், நல்ல உபகரணங்கள், மற்றும் வேலைக்...
வணிகம் சார்ந்த ஆலோசனைகள்