ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை முகப்பு: குறைந்த செலவு, கட்டுமானத்திற்கு எளிதானது, மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் ஹாலோ பிளாக் கற்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதன் வகையில் இன்றைய பதிவு ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை. இறுதியில் இத்தொழிலுக்கான பிராஜக்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்ககோம் அதனால கடைசி வரை பாருங்க. அறிமுகம்: கட்டுமான துறையின் அசுர வளர்ச்சி ஹாலோ பிளாக் கற்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய பதிவில் ஹாலோ பிளாக் கற்களின் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை விரிவாக காணலாம். கட்டமைப்பு வசதி: இத்தொழிலுக்கான இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும். திறந்தவெளியாக இருந்தால் பரவாயில்லை. மிஷின் : ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று Concrete Mixer, மற்றொன்று hydraulic Pressing Machine. இந்த Concrete Mixer கற்களுக்கு தேவையான சி...
வணிகம் சார்ந்த ஆலோசனைகள்