ஹவாய் சப்பல் உற்பத்தி
வரவேற்கிறோம்.
இன்றைக்கு நாம
பாக்க போற பிசினஸ் ஹவாய் செருப்பு உருவாக்கம் (Slipper Manufacturing} இப்ப மார்கெட்ல இந்த
மாதிரியான வகைவகையான
சாதாரண Slipperகளுக்கு நல்ல மவுசு உண்டு. இத ஹவாய் Chappal-னும் சொல்லுவாங்க. இது ஒரு
Fashion Trend-ஆவும் மாறிட்டு வருது.
இப்ப ஒரு Medium
Industry-ல எப்படி இந்த மாதிரியான Slippers உற்பத்தி பண்றாங்கன்னு முதல்ல பாக்கலாம்,
அப்பறம் கடைசில் இத எப்படி Low Budget-ல பண்றதுன்னு பாக்கலாம்.
செய்முறை:
1.
இந்த
ஹவாய் Chappal உற்பத்தியின் முதல் Stage CUTTING இதுல செருப்போட (Slipper) அடிபாகம் (Bottom) அல்லது
Sole ரெடி பண்றாங்க, இந்த மாதிரி கட்டிங் மிஷின்ல வித விதமான ரப்பர் ஷீட்-அ (Rubber Sheet) கொடுத்து
டை (Die) மூலமா கட் பண்றாங்க, வெவ்வேறு டையை மாற்றுவதன் மூலமாக, வெவ்வேரு சைஸ்கள்ல சப்பல்ஸ்
கிடைக்கும்.
இந்த ஹவாய் சப்பல் உற்பத்தியில மிக முக்கியமான மூலப்பொருள் ரப்பர் ஷீட்தான். இது பல வண்ணங்கள்ல
பல தரத்தில் (Quality) கிடைக்கிது, செருப்போட தரம் இந்த Rubber Sheet தரத்தைப் பொறுத்து அமைகிறது.
2.
Second
Stage-ல Grinding, கட் பண்ணி வர Sole-ல உள்ள பிசிறுகளை நீக்கி Smooth ஆக்கிறதுக்காக
இந்த மிஷின் பயன்படுது.
3.
மூன்றாவது
Stage-la Printing,, இந்த Stage-la Slippers-க்கு வண்ணங்கள் இடப்படுது, அப்படியில்லாம,
வண்ணங்கள் இடப்பட்டு Readymade Rubber Sheet-வும் RAW Materials கிடைக்கிது.
4.
நான்காவது
Stage-ல Drilling, Strap களுக்காக Bottom-ல மூன்று துளைகள் இடப்படுகிறது.
5.
ஐந்தாவது
Stage-ல Strapping, இடப்பட்ட துளைகளில் Strap-கள் போடப்படுகின்றன. இதற்கென்று
Special-ஆக வடிவமைக்கப்பட்ட ஊசியில், மிஷினின் உதவி கொண்டு இந்த Strap-கள் இடப்படுகின்றன.
மூலப்பொருட்கள்
(RAW Material):
RAW Material-களில்
முக்கியமானதான இந்த Sole or Bottom பொதுவாக இரண்டு வகை Sheet-ஆக கிடைக்கிறது, ஒன்று,
1.
Sole
Rubber Sheet மற்றொன்று
2.
EVA
Sheet இது எடை குறைவாக Foam Type-ல் வருகிறது.
தடிமனுக்கு ஏற்றவாறு
வெவ்வேறு விலைகளில் கிடைக்கிறது.
Medium
Quality வகை ஒரு Sheet சுமார் ₹.350
திலிருந்து கிடைக்கிறது, இதிலிருந்து
நடுத்தர அளவுகளில் சுமார் 19 Chapplal-கள் பெற முடியும்.
மற்றொரு Raw
Material-ஆன Slipper Strap PVC மற்றும் Rubber Material-களில் கிடைக்கிறது.
இவையனைத்தும் பெரும்பாலும்
Delhi-யிலிருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இவற்றின் உற்பத்தியாளர்கள் மற்றும் Local
Dealer-களை பற்றி அறிய Website-ன் துணை கொண்டு தேடவும்.
Machine :
இந்த Sole அல்லது
Bottom Cut செய்ய நிறைய Type-களில் Machine உண்டு.
1.
Manual
Hand-Operated Machine
2.
Hydraulic
Hand-Operated Machine
3.
Power
Operated Machine
இவற்றின் விலை
சுமார் 14,000 திலிருந்து ஆரம்பமாகிறது, தமிழ்நாட்டில் இந்த மிஷின்கள் கிடைப்பதாகத்
தெரியவில்லை, Cheap-ஆக டெல்லியிலிருந்து JMTC எனும் Company-யிலிருந்து கிடைப்பதாக
அறிய முடிகிறது, எனினும் Company-யின் நம்பகத்தன்மை மற்றும் மிஷினின் தரம் இவற்றை அறிந்து
வாங்குவது சிறந்தது.
குறைந்த பட்ஜெட்டில்
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு Sole cut செய்ய இந்த Manual Hand Operated மிஷின்
மட்டும் வாங்குவது சிறந்தது, Grinding, drilling, மற்றும் Strapping-களுக்கு மிஷினின்
துணையில்லாமல் செய்வது நல்லது, ஆர்டர்களின் அளவைப் பொறுத்து தேவைக்கேற்ப கொள்முதல்
செய்தால் நல்லது.
Sales and
Marketing:
அருகில் உள்ள கடைகளுக்கு
சென்று சந்தைப்படுத்தினால் குறைந்த போக்குவரத்து செலவு, மேலும் இவ்வகை ஹவை சப்பல்கள்
எடை குறைவாக இருப்பதால் கொண்டு செல்வது எளிது.
Sole மற்றும்
Strap-கள் கொஞ்சம் தரமானதாகவும், பல வண்ணங்களில் நவீன காலத்திற்கேற்ற நல்ல டிசைன்களில்
உருவாக்கினால் அதிகம் விரும்பப்படும், விற்கப்படும் கடைகளில் நேரடியாக சென்று அறிந்து
கொண்டு அவற்றிற்கேற்ப உருவாக்கினால் சிறந்தது. Strap-கள் Smooth-ஆக இருந்தால் அணியும்போது
சிரமமானதாக இருக்காது.
குறைந்த பட்ஜெட்டில்
Manual machine கொண்டு செய்தால் ஐம்பதாயிரத்தில் நடத்தலாம், Medium Size Company-க்கு
ஒன்றரை லட்சம் செலவாகும்.
நன்றி.
இந்த பதிவை வீடியோ வடிவில் காண கீழே அழுத்தவும்,