Skip to main content

வீட்டிலேயே டைல்ஸ் தயாரிக்கும் தொழில்


வீட்டிலேயே டைல்ஸ் தயாரிக்கும் தொழில் | handmade Tiles How to make Homemade tiles


என்னதான் பல லட்சங்கள் செலவு பண்ணி வீடு கட்டினாலும், கடைசியில் வீட்டின் உட்புறத்தை அழகாகக் காட்டுவது ‘Tiles’ எனப்படும் இந்த ஓடுகள்தான்.

‘Ceramic Tiles’ எனப்படும் இந்த பீங்கான் ஓடுகளை பயன்படுத்துவதால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக நம்பப்படுகிறது மேலும் இது தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் நிறைய சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முறைகள் பின்பற்றப்படுகின்றன, இந்த ‘Ceramic Tiles’- க்கு மாற்றாக தீங்கு விளைவிக்காத, கைகளால் தயாரிக்கப்படும் ‘Handmade Cement Tiles’-ஐப் பற்றிக் காணலாம்.

Intro:
இன்றைய கால கட்டத்துல கட்டுமானப்பொருட்களோட தேவை மற்றும் விலை அதிகமாக போயிட்டிருக்கிறதுனால அதை கருத்தில் கொண்டு நாமே சுயமா தயாரிக்க முடிந்த அதிலும் மிஷினின் துணையில்லாமல்  உற்பத்தி செய்ய முடிந்த கட்டுமானப்பொருட்கள் வெகு சொற்பமே.
அந்த வகையில் பெரும்பாலும் மிஷினின் துணையில்லாமல் செய்யக்கூடிய இந்த டைல்ஸ் உற்பத்தி செய்முறையை சுருக்கமாக பார்ப்போம். 


முதல்ல இந்த டைல்ஸ் செய்ய தேவையான உபகரணங்களை முதலில் காணலாம்.

உபகரணங்கள் ( Tools ):
1.   உலோகச் சட்டம் ( Metal Border Frame )
2.   உலோக வண்ணச் சட்டம் ( Metal Design Frame )
3.   சிமெண்ட் கரண்டி அல்லது கொலுறு ( Spade )
4.   கண்ணாடி பலகை ( Glass Slab )
5.   பாண்டு ( Pitch Bowl )
6.      வார்ப்பிரும்பு தட்டு பிடியுடன் ( Cast Iron Plate with Handle )
7.      பாத்திரம் மற்றும் கரண்டி ( Vessel with Spoon )
8.      நீளமான கத்தி ( Long Blade )
9.      சிறிய அரைக்கும் இயந்திரம் ( Small Grinding Machine )

மற்றும் ஊறவைக்க தண்ணீர்த்தொட்டி ( Water Tank for Soaking )

RAW Materials :
1.      A1 பிர்லா சிமெண்ட் (A1 Birla Cement)
2.      ஆற்று மணல் (River Sand)
3.      சின்ன ஜல்லி கற்கள் ( Baby Jelly)
4.      சிவப்பு, மஞ்சள், ஊதா மற்றும் இதர செயற்கை ஆக்ஸைட் நிறமிகள் (Red, Yellow, Blue and other Synthetic Oxide Colours)
5.      மண்ணென்ணை (Kerosine)

செய்முறை:
முதலில் டைல்ஸ் செய்வதற்கு தேவையான உலர் சிமெண்ட் (Dry Cement) மற்றும் ஈர சிமெண்ட் (Wet Cement) கலவைகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.
உலர் சிமெண்ட் (Dry Cement) கலவைக்கு சிமெண்ட் 1 பங்கும் நன்றாக சலிக்கப்பட்ட மணல் 3 பங்கும் நன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
ஈர சிமெண்ட் (Wet Cement) கலவைக்கு சிமெண்ட் ஒரு பங்கு, நன்றாக சலிக்கப்பட்ட மணல் 3 பங்கு மற்றும் தண்ணீர் 5 பங்கு சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு சிவப்பு வண்ணத்திற்கு ஒன்றரை மடங்கு மணலும், சிமெண்ட் மூன்று மடங்கு மற்றும் RED OXIDE ஒரு மடங்கும் கலந்து அரவை இயந்திரத்தில் நீர் சேர்த்து நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். இதைப் போல வெவ்வேறு கலர்களுக்கு வெவ்வேறு விகிதாச்சாரங்களில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் அளவுகளின் விவரங்களை வீடியோவின் இறுதியில் காணலாம்.
அடுத்து
இந்த இரும்பு சட்டத்தை நன்றாக மண்ணெண்ணை கொண்டு சுத்தம் செய்து விட்டு, அதனை இந்த சுத்தமான கண்ணாடி தட்டின் மேல் சரியாக வைக்க வேண்டும். இந்த கண்ணாடி தட்டு டைல்ஸ்க்கு மெருகூட்டுவதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.  பின்பு இந்த உலோக வண்ண சட்டத்தை வைத்து, என்ன Design-ல் தேவையோ அதனதன் இடத்தில் வெவ்வேறான வண்ணங்களை ஊற்ற வேண்டும். இப்பொழுது வண்ணங்கள் ஒன்றோடொன்று சேரா வண்ணம் உடனடியாக சிறிது உலர் சிமெண்ட் கலவையை எடுத்து மேலே தூவ வேண்டும். பிறகு ஈர சிமெண்ட் கலவையை எடுத்து நன்றாக பரப்பி உலோக சட்டத்தின் மட்டம் வரை நிரப்பி சற்று அழுத்தி சமன் செய்ய வேண்டும், பின்பு அதிகப்படியான சிமெண்ட்- ஐ நீளமான பிளேடின் துணைகொண்டு நீக்கி பிறகு இதன் மேல் கனமான வார்ப்பிரும்பை வைத்து அழுத்த வேண்டும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட டைல்ஸ்கள் பின்பு உலோக சட்டங்கள் மட்டும் நீக்கப்பட்டு அறை வெப்ப நிலையில் ஓரிரு நாட்கள் வைக்கப்பட்டு, பின்பு நீர்த்தொட்டியில் ஆறேழு நாட்களுக்கு ஊற வைக்கப்படுகிறது. பின்பு நேரடி சூரிய ஒளியில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வைக்கப்பட்டு, கண்ணாடி பலகைகள் நீக்கப்பட்டு மறு உபயோகத்திற்காக சுத்தம் செய்யப்பட வேண்டும், இவ்வாறு தயாரான டைல்ஸ்கள் சரிபார்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நல்ல தரமான டைல்ஸ்களுக்கு அசுத்தங்கள் மற்றும் கற்கள் நீக்கப்பட்ட மணலை பயன்படுத்த வேண்டும், மேலும் நல்ல தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
புதிய வகை நவீன டிசைன்களை கொண்ட டைல்ஸ்களை உருவாக்கினால் நல்ல வரவேற்பு இருக்கும்.
இவ்வகை டைல்ஸ்களை சந்தைப்படுத்துவது எளிது, நல்ல ‘Building Contractor’ அணுகி, குறித்த நேரத்தில் ‘Supply’ செய்தால் தொழிலில் விரைவில் முன்னேற்றம் காணலாம்.



வண்ணங்கள் உருவாக்கம் Colour Preparation:

சிவப்பு ஆக்சைட் RED Oxide :
1.5 :3 :1 – Sand : Cement : Red Oxide

மஞ்சள் ஆக்சைட் Yellow Oxide :
4 :1 :8 :4 – Sand : White Cement : Cement : Yellow Oxide

பச்சை ஆக்சைட் Green Oxide :
2 : 4 : 1 Sand : Cement : Green Oxide

நீல ஆக்சைட் Blue Oxide :
2 : 4 : 1  Sand : Cement : Blue Oxide





Popular posts from this blog

உலர் பழங்கள் விற்பனையகம்

உலர்பழங்கள் விற்பனையகம். புதிதாக என்ன தொழில் தொடங்கலாம், தகவல் தொழில்நுட்ப வேலையை (IT Company Job) விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம் அல்லது நல்ல எதிர்காலம் உள்ள தொழில் என்ன அப்படின்னு யோசிச்சிட்டு இருகீங்களா உங்களுக்கான சிறிய வழிகாட்டுதல்தான் தான் இந்த பதிவு. இந்தப்பதிவில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றமாதிரியான டிரண்டியான ஒரு பிசினஸ பத்தி பார்க்க போகிறோம். பெருகி வரும் நோய்களின் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்கள் உடல் நலத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துகிறாங்க. அதற்காக அவங்க உணவுபழக்கத்துல (diet) சத்துகள் அதிகம் நிறைந்த கொட்டைகள் மற்றும் உலர்பழங்கள்( Nuts & dryfruits) அதிகளவு சேத்துக்கிறாங்க, அதனால இதை விற்பனை செய்கிற கடைகளுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருக்கு. அந்த வகையில இன்றைக்கு நாம பாக்கப்போற தொழில் உலர்பழங்கள் விற்பனையகம் (Dryfruits Shop).   ஏற்கனவே நீங்க இந்த தொழில பண்ணிட்டு இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான நிறைய ஆலோசனைகள் மற்றும் நுணுக்கங்களை (Tips & Tricks) இங்க சுருக்கமா கொடுத்திருக்கோம். இப்ப வாங்க பதிவுக்குள்ள போகலாம். இந்த வகை கடை...

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை

ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை    முகப்பு: குறைந்த செலவு, கட்டுமானத்திற்கு எளிதானது, மற்றும் தேவையில்லை என்றால் சுவற்றை இடித்து மீண்டும் கற்களை முழுமையாக மறு உபயோகம் செய்யலாம் என்ற அடிப்படையில் ஹாலோ பிளாக் கற்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதன் வகையில் இன்றைய பதிவு ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முறை. இறுதியில் இத்தொழிலுக்கான பிராஜக்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்ககோம் அதனால கடைசி வரை பாருங்க.   அறிமுகம்: கட்டுமான துறையின் அசுர வளர்ச்சி ஹாலோ பிளாக் கற்களுக்கான தேவையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இன்றைய பதிவில் ஹாலோ பிளாக் கற்களின் உற்பத்தி முறை, அதற்கு ஆகும் செலவு, அதற்கான இடவசதி போன்றவற்றை விரிவாக காணலாம். கட்டமைப்பு வசதி: இத்தொழிலுக்கான இட அமைப்பு குறைந்தபட்சம் 12 சென்ட்கள், போர்வெல் தண்ணீர் வசதியோடு இருக்க வேண்டும். திறந்தவெளியாக இருந்தால் பரவாயில்லை.  மிஷின் : ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்திக்கு இரண்டு முக்கிய இயந்திரங்கள் தேவை, ஒன்று Concrete Mixer, மற்றொன்று hydraulic Pressing Machine.   இந்த Concrete Mixer கற்களுக்கு தேவையான சி...

பாக்குமட்டை தட்டு தயாரித்தல்

பாக்குமட்டை தட்டு தயாரிக்கும் தொழில் எப்படி? பாக்கு மட்டை தட்டு உற்பத்தி இ யற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய திருப்பி இருக்கு. அதிலும் குறிப்பாக பாக்கு மட்டை தட்டுகளுக்கு கொஞ்சம் கூடுதலாவே வரவேற்பு இருக்கு. ஏன்னா இதுல சூடான உணவுப்பொருட்களை வைப்பதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் தடிமமாவும் கனமாகவும் இருக்கு, அதுமட்டுமில்லாம இதோட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, மற்றும் சுகாதாரமான தயாரிப்பு முறை நம்ம ஊர்ல மட்டுமில்ல வெளிநாடுகளிலேயும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்லயும் விருப்பத்திற்குரியதா இருக்கு. எல்லா தொழில்களைப் போல இல்லாம இந்த பாக்கு மட்டை தொழில்ல சவால்களும் நுணுக்கங்களும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. ஆனாலும் இதோட எதிர்கால வளர்ச்சி சிறப்பா இருகிறதுனாலயும் தட்டுகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரிச்ச...