சரியான சிசிடிவி சிஸ்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? சிசிடிவி என்றால் என்ன? How to Choose Correct CCTV System and Its Components
Hi!
CCTV Intro:
உங்க வீட்டுக்கு இல்ல கம்பெனிக்கு சிசிடிவி கேமரா பொருத்த போறீங்களா? அதுக்கு முன்னாடி சில அடிப்படை விசயங்களை தெரிஞ்சிகிட்டிங்கன்னா செலவயையும் குறைத்து சரியான சிஸ்டத்தயும் தேர்வு
செய்யலாம். சிசிடிவி சிஸ்டம் பற்றி சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்தப்பதிவில் பார்க்கலாம் வாங்க...Overview:
இப்பொழுது இந்த சிசிடிவி சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். முதலில் இந்த செக்யூரிட்டி கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இந்த வயர்களின் மூலம் எலெக்ட்ரிக் சிக்னல்களாக பெறப்பட்டு இந்த DVR Box-க்கு கொண்டு செல்லப்படுகிறது, பிறகு அவை Digital சிக்னல்களாக மாற்றப்பட்டு DVR-ன் உள்ளே உள்ள Hard Disk-ல் Record செய்யப்படுகிறது. இந்த காட்சிகளை நாம் ஒரு டிஸ்ப்ளேயின் துணை கொண்டு நேரடியாகவோ அல்லது தேவையான நேரத்தில் Playback செய்தோ காணலாம். மேலும் Remote View மற்றும் மொபைல் போனில் காண்பதற்கு ஒரு Router உதவியுடன் இந்த DVR-ஐ Internet-உடன் இணைக்க வேண்டும்.
Body :
டெக்னாலஜி அடிப்படையில் சிசிடிவி சிஸ்டத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அனலாக் கேமரா (Analogue Camera ) மற்றொன்று ஐபி கேமரா(IP Camera ).
இந்த ஐபி கேமரா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு Networking அடிப்படையில் இயங்குவதால் எங்கிருந்தும் இதனை தனித்தனி கேமராவாக இயக்கலாம், இதன் காட்சிகளை எங்கும் காணலாம் மற்றும் பதிவும் செய்யலாம், மேலும் இந்த கேமராவின் உள்ளேயும் MicroSD Card மூலம் காட்சிகளை பதிவு செய்யும் வசதி உள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்டு இயங்குவதால் இதன் விலை அதிகமாகவும், configure மற்றும் troubleshooting-kku network knowledge தேவைப்படுவதால் எல்லோராலும் எளிதாக இயக்க முடியாததாகவும் இருக்கிறது. தற்சமயம் இதனை பெரும்பாலும் அரசு மற்றும் பெரிய நிறுவனங்கள் நிறுவிக் கொள்கின்றன.
அடுத்து நாம் விலை குறைவானதும் அதிகம் விற்பனையாவதும் கையாளுவதற்கு எளிதானதுமான analog கேமராக்களை பற்றி பார்ப்போம்.
இந்த வகை கேமராக்கள் சிசிடிவியின் தொடக்க காலத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து இப்பொழுது High Definition எனப்படும் அதிக துல்லியமான படத்தினை நேரடி மற்றும் பதிவு செய்து Internet உதவியுடன் உலகின் எந்த மூலையிலிருந்தும் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இவ்வகை கேமராக்கள் IP கேமராக்கள் போல தனித்தனியான Access கொண்டிராமல் DVR எனப்படும் ஒரு Box-ன் உதவி கொண்டு இதன் காட்சிகளை காண முடிகிறது. இந்த DVR-ல் பொருத்தப்பட்டுள்ள HardDisk- ன் உதவி கொண்டு காட்சிகளை சேமித்து வைத்து பிறகு காண முடிகிறது.
Typical சிசிடிவி சிஸ்டம் :
இப்பொழுது பொதுவாக ஒரு சிசிடிவி சிஸ்டம் என்பது என்னென்ன பொருட்களை உள்ளடக்கியது என்று பார்ப்போம்.
முதலில் கேமரா இதன் மெகாபிக்சல் திறனைப் பொருத்துதான் ஒரு காட்சியின் தெளிவு வரையறுக்கப்படுகிறது. இதன் HD range 1MP, 2MP, 3MP, 4MP, 5MP போன்றவகளில் கிடைக்கிறது. இதில் MP அல்லது MegaPixel என்பது கேமராவின் துல்லியத்தை குறிக்கிறது. அதிக Megapixel கொண்ட கேமரா அதிக துல்லியமான படங்களை Capture செய்கிறது.
இரண்டாவது DVR அல்லது NVR - இதில் DVR – Digital Video Recorder பெயருக்கேற்றார் போல் கேமராவிலிருந்து வரும் காட்சிகளை இது Process செய்து பதிவு செய்ய உதவுகிறது. இது 4-Channel, 8-Channel, 16-Channel போன்ற Range களில் கிடைக்கிறது. இதில் 4-Channel என்பது இந்த DVR-ல் நேரடியாக ஒன்று முதல் நான்கு கேமராக்கள் வரை இணைக்க முடியும். இதில் NVR –Network Video Recorder என்பது IP Camera-வை Connect செய்ய உதவும் பெட்டியாகும் இதில் Analog கேமராவை இணைக்க முடியாது.
மூன்றாவது முக்கியமான கருவி Harddisk இந்த Hardisk-ல் தான் சிசிடிவி கேமராவிலிருந்து வரும் காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டு பின்பு தேவையான நேரத்தில் இதில் Record செய்யப்பட்டவை Playback செய்யப்படுகிறது. இதன் நினைவுத்திறன் அல்லது Storage Capacity-ஐப் பொறுத்துதான் எத்தனை நாட்களுக்கு காட்சிகள் சேமிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் Recording Capacity-ஐப் பொறுத்து பொதுவாக 500GB, 1TB, 2TB போன்ற அளவுகளில் கிடைக்கிறது.
நான்காவது Power Supply தற்போதுள்ள கேமராக்கள் 12V DC Power Supply-ஐக் கொண்டு இயங்குகின்றன, இந்த Power Supply-ஆனது Camera-களுக்கு இரண்டு வகையாக தரப்படுகிறது, ஒன்று நேரடியாக 12V DC Adapter-ஐக் கொண்டு தரப்படுகிறது, இவ்வகை அடாப்டர்கள் 1A, 2A அளவுகளில் கேமராவின் தேவைக்கேற்ப நேரடியாக கொடுக்கப்படுகிறது. மற்றொன்று வயர்களின் மூலம் SMPS கொண்டும் 12V DC supply தரப்படுகிறது. SMPSகள் கேமராக்களின் எண்ணிக்கைகேற்ப 4-Channel, 8-Channel போன்ற வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் SMPS கொண்டுதான் Power Supply தரப்படுகிறது.
ஐந்தாவது வயர்கள் : இந்த சிசிடிவி போன்ற Low Voltage – application - களுக்கு பிரத்யேகமாக RG-59 Coaxial Cable உபயோகபடுத்தப்படுகிறது. இது ஒரு Sheilded Cable அதாவது வெளிப்புறத்தில் இருந்து எந்த ஒரு Signal-ம் உள்ளே புகாதவாறு இந்த Cable-ன் உள்ளே Core Wire-ஐச் சுற்றி பாதுகாப்பு Wire உள்ளது. மேலும் இந்த வகை வயர்களின் இரு முனைகளிலும் BNC Connector-கள் இட்டு ஒரு முனை கேமராவிலும் மற்றொரு முனை DVR-யிலும் Connect செய்யப்படுகிறது. மேலும் கேமராவிற்கு Power Supply க்காக தனியாக ஒரு வயர் இட்டு 12V DC Power Supply செய்யப்படுகிறது.
இன்னும் advance ஆக இப்பொழுது Siamese Cableகள் எனப்படும் இவ்வகை வயர்கள் ஒருங்கிணைந்த Coax Cable மற்றும் Power Cableகள் சேர்ந்தே கிடைக்கின்றன.
இதற்கு மாற்றாக Unsheilded Cable எனப்படும் CAT5, மற்றும் CAT6 Cableகளும் உபயோகப்படுத்தப்படுகிறது,
ஆனால் இவற்றில் Coax Cableல் இருப்பதைப் போன்று Protective outer Sheild இல்லாததால் signal Noise-ஐத் தடுக்க இதைப் போன்ற பலூன்கள் இவ்வகை வயரின் இரு முனைகளிலும் பொருத்தப்படுகிறது.
இன்னும் அதிகபடியாக காட்சிகளை நேரடியாக அல்லது Live-ஆக மொபைலிலோ அல்லது Laptop PC- யிலோ காண்பதற்கு இணைய வசதியுடன் கூடிய Router தேவைப்படும்.
இப்பொழுது Analog Camera-வின் HD தொழில்நுட்பத்தில் 1MegaPixel கேமராவிற்கு அடுத்தபடியாக Entry Level-ல் அதிகம் விற்பனையாகும் 2MegaPixel Camera உள்ளது. இதன் மூலம் பகலில் கலர் படங்களையும் இருட்டில் இதனுள் உள்ள IR Censor-களின் மூலம் Black and White காட்சிகளையும் காணமுடிகிறது. ஒரு அறையிலோ அல்லது வெளியிலோ நிறுவினால் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு நபரை சற்று தெளிவாக அடையாளம் காண முடியும். அதிக துல்லியமான காட்சிகளுக்கும், Zoom செய்தாலும் கலங்கள் இல்லாமல் தெரியும் படங்களுக்கும் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராக்கள் நிறுவ வேண்டும். ஆனால் அதிக மெகாபிக்ஸல் கேமராக்கள் Hard Disk-ல் அதிக நினைவுத்திறனை விழுங்குகிறது, அதாவது Harddisk-ல் அதிக Storage Space-ஐ பிடித்து கொள்கின்றன, இதனால் பதிவு செய்யப்படும் காட்சிகளின் கால அளவு குறைகிறது. உதாரணத்திற்கு 2MegaPixel கேமராவினை கொண்டு இரண்டு நாட்களுக்கு பதிவு செய்யப்படும் காட்சிகள், அதையே 4Megapixel கேமராவினை கொண்டு செய்யப்படும்பொழுது 1 நாளுக்குதான் நீடிக்கும். மேலும் அதிக மெகாபிக்சல் கேமராக்களுக்கு அதிக திறன் கொண்ட DVR-ம் அதிக Capacity உள்ள Hard Disk-ம் நிறுவ வேண்டியுள்ளது இதனால் செலவினங்கள் அதிகரிக்கும்.
Advanced :
இப்பொழுது சந்தையில் உள்ள சில advanced Security Cameras பற்றி பார்க்கலாம்:
இப்பொழுது CCTV Technnology இன்னும் advance ஆகி இரவில் Zero Light-ல் கூட கலர் படங்களை காணும் வசதிகளை கொண்ட கேமராக்களும்,
360 Degree Rotation கொண்ட கேமராக்களும்,
Motorized Zoom எனப்படும் கேமராவினுள் சிறிய Motor பொருத்தப்பட்டு தூரத்தில் உள்ளவைகளை கூட Auto Focus செய்து காணும் கேமராக்களும்,
PTZ எனப்படும் எல்லா பக்கமும் திரும்பி துல்லியமான படங்களை எடுக்கும் Zoom வசதி கொண்ட கேமராக்களும்,
திருடர்கள் வந்தால் Siron ஒலி எழுப்பி எச்சரித்து alert செய்யும் கேமராக்களும், Solar Camera எனப்படும் சூரிய மின்சக்தியில் இயங்கும் கேமராக்களும் சந்தையில் கிடைக்கின்றன.
மேலும் வீடியோ மற்றும் ஆடியோ ஒருங்கேப் பெற்று தனித்து செயல்படும் Wi-Fi கேமராக்களும் பரவலாக கிடைக்கின்றன.
இன்னும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய Hard Disk-ஐ திருடர்கள் சேதப்படுத்தினாலும் பதிவான காட்சிகளை Online-ல் எங்கிருந்தும் காணும்படி Cloud Storage Technology உதவுகிறது,
Overall:
So நீங்க ஒரு சிசிடிவி சிஸ்டம் இன்ஸ்டால் செய்ரதுக்கு முன்னாடி First Choose பண்ண வேண்டியது கேமரா கிளாரிட்டி – நீங்க Budget Level-அ பார்த்திட்டிருக்கீங்கன்னா Entry Level Camera- வான 2MegaPixel Camera ஒரு சிறந்த Option இது எந்தெந்த area-க்கு suit ஆகும்னா ஒரு அறையில் என்ன நடக்கிறது என்று காண்பதற்கும்,, குழந்தைகள் என்ன செய்கிறது என்று பார்ப்பதற்கும், வாசலில் வருபவர்கள் யார், கேட்டில் நிற்பது யார், பார்க்கிங்கில் கார் நிற்கிறதா என்பது போன்ற அடிப்படை விசயங்களை காண்பதற்கு இந்த வகை கேமராவே போதுமானது. கேமராக்களில் பொதுவாக Indoor Doom Type கேமரா அறையினுள் பொருத்த சிறந்தது. அடுத்து Outdoor Bullet Type கேமரா இவை Weather Proof-உடன் நீர் உட்புகாவண்ணம் Design செய்யப்பட்டுள்ளது, வெளிப்புறத்தில் நிறுவ சிறந்தது.
அடுத்து முடிவு செய்ய வேண்டியது எத்தனை கேமராக்கள் மற்றும் அதற்கேற்றார் போல் எத்தனை Channel DVR என்று தேர்வு செய்ய வேண்டும் உதாரணத்திற்கு 3 கேமராக்களுக்கு 4-Channel DVR போதுமானது. ஆனால் 5 கேமராக்களுக்கு 8-Channel DVR தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் எட்டு கேமராக்கள் வரை இணைக்க முடியும். மேலும் இந்த DVR 2MP கேமராக்கள் Support செய்வதாக இருக்க வேண்டும். சந்தையில் இப்பொழுது 8megapixel கேமராக்கள் வரை support செய்யும் DVR-கள் கிடைக்கின்றன, இவற்றில் 2MP கேமராக்களிலிருந்து 8MP கேமராக்கள் வரை இணைக்க முடியும், ஆனால் 2MP வரை சப்போர்ட் செய்யும் DVR-ல் 3MP, 4MP போன்ற கேமராக்களை இணைக்க முடியாது. அதனால் DVR தேர்வு செய்யப்படும்பொழுது எத்தனை Megapixel கேமரா வரை Support செய்யும் எனபதனை உறுதி செய்து தேர்வு செய்ய வேண்டும். அடுத்து DVR-ல் நாம் கவனிக்க வேண்டியது இதன் Compression Technology அதாவது இது காட்சிகளை எவ்வளவு சுருக்கமாக பதிவு செய்து Hard Disk-ன் Storage Space-ஐ மிச்சம் செய்கிறது எனபதைக் குறிக்கும். இது H264, H265, Standard-ல் குறிக்கப்படுகிறது, இதில் H264-ஐ விட H265 பாதியளவு Storage Space-ஐ மிச்சம் செய்கிறது.
அடுத்து Hard Disk இதனை எத்தனை நாட்களுக்கு உங்களுக்கு காட்சிகள் வேண்டுமோ அதனைப் பொறுத்து தேர்வு செய்ய வேண்டும், பொதுவாக 1000GB Capacity உள்ள Hard Disk / 2Megapixel Camera H264 Codec-ல் 6 நாட்களுக்கு தொடர்ந்து காட்சிகளை பதிவு செய்யும்.
அடுத்து SMPS 12V DC Power Supply கேமராக்களுக்கு ஏற்றவாறு 4, 8, போன்ற அளவுகளில் தேர்வு செய்யலாம்.
பிறகு டிஸ்ப்ளே அல்லது டிவியும் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும், 2Megapixel கேமராக்களுக்கு Full HD 1080p டிஸ்ப்ளேவும், 2Megapixelக்கும் அதிகமான கேமராக்களுக்கு 4K TV-யும் சிறந்த தேர்வு.
ஒரே ஒரு கேமரா போதும் என்பவர்களுக்கு Wi-Fi கேமரா சிறந்த தேர்வு இது Memory Card Storage-ஐ பெற்றுள்ளது இதில் வீடியோ உடன் கூடிய ஆடியோ காட்சிகளை Internet உதவியுடன் காணலாம்.